16
October, 2026

A News 365Times Venture

16
Friday
October, 2026

A News 365Times Venture

அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்

Date:

அமெரிக்காவில் சிகாகோவிற்கு அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.

வழக்கம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), அந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் ஆகிக்கொண்டிருந்தன. பக்தர்களும் கோயிலில் இருந்திருக்கின்றனர்.

மதிய நேரத்தில், அந்தக் கோயிலுக்குள் 19 வயதான அலெக்ஸாண்ட்ரோஸ் பாப்போராகிஸ் சென்றிருக்கிறார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

இந்தியர்களைப் பிடிக்காமல், கோயிலில் குழுமியிருந்த இந்தியர்களைச் சுட்டுக்கொல்வதே பாப்போராகிஸின் திட்டமாக இருந்திருக்கிறது.

சம்பவம் நடந்த கோயில்

ஆனால், அங்கே அவரது ஏஆர்-15 (AR-15) ரகத் துப்பாக்கி ஜாம் ஆகி இயங்காமல் போயிருக்கிறது. இதனால், யாருக்கும் தெரியாமல் கோயிலில் இருந்து தப்பித்திருக்கிறார் அலெக்ஸாண்ட்ரோஸ் பாப்போராகிஸ்.

சம்பவம் நடந்த நேரத்தில், அது நவராத்திரியின் முதல் நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்ததாகத் தெரியவருகிறது.

திட்டம் நடைபெறாமல் திரும்பச் சென்ற பாப்போராகிஸ் தன்னுடைய சக ஊழியரிடம் அவருடைய துப்பாக்கி செயல்படாமல் போனது குறித்துச் சொல்லியிருக்கிறார்.

அந்தச் சக ஊழியர் போலீசாருக்குக் கொடுத்த தகவலில்தான் மொத்தச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாப்போராகிஸின் வீட்டைச் சோதனை செய்து பார்த்ததில் இன்னும் சில ஆயுதங்களும், இந்தியர்களுக்கு எதிராக அவர் போட்டு வைத்த திட்டங்களும் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து வரும் இந்திய எதிர்ப்பு, தெற்காசிய எதிர்ப்பு, இது சம்பந்தமான இணையப் பதிவுகள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்குக் காரணம் என்று NDTV-க்குக் கொடுத்த பேட்டியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகமும் இந்த வெறுப்புத் தீயைப் பரப்புகிறது என்று கூறியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

இந்திய அரசின் அறிக்கை
இந்திய அரசின் அறிக்கை

அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு இந்திய அரசும், “இந்தச் சம்பவம், அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வை அதிகரிப்பது, வெறுப்பினால் தூண்டப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது

மற்றும் இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை தற்போதைய அவசியத் தேவையாகும்” என்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! – கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7...

'நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது'- அன்புமணி விமர்சனம்

சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து...

'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' – அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால்...

RTI விவகாரம்: "எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?" – தவெக அரசுக்கு உதயநிதி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சரிபார்ப்பகம் குறித்து தனது எக்ஸ்...