25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

Pegasus Spy: “மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு?'' – உச்ச நீதிமன்றம்

Date:

2021-ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இஸ்ரேலில் இருந்து பெகசாஸ் என்னும் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற புகார்கள் எழுந்து பூகம்பம் கிளம்பியது.

இதுக்குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் விசாரித்தனர்.

பெகாசஸ் ஸ்பைவேர்

அப்போது, இந்த வழக்கு குறித்து அவர்கள் கூறியதாவது,

“நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த எந்த அறிக்கையையும் நீதிமன்றம் வெளியிடாது. ஒருவேளை, அது தனிப்பட்ட மனிதர்களின் உரிமையை மீறுவதாக இருந்தால் தான் நீதிமன்றம் தலையிடும்.

உளவு மென்பொருள் அரசிடம் இருந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.

(தேச விரோத சக்திகளுக்கு எதிராக) நாடு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு? உளவு மென்பொருளை வைத்திருப்பது தவறு அல்ல. அதை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்வி.

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யவும், தியாகம் செய்யவும் முடியாது. தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட்டுள்ளது”.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 30-ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PMK: இணைந்த தந்தை – மகன் இதயங்கள்! – இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி...

‘சார்… ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக...

எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' – DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்

கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் அமைச்சராக...

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! | Live Updates

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை. கடந்த...