29
August, 2026

A News 365Times Venture

29
Saturday
August, 2026

A News 365Times Venture

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' – பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

Date:

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதனால், இந்தியா அட்டாரி – வாகா எல்லை மூடுதல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடான சீனா இந்தத் தாக்குதல் குறித்து வாயை திறக்கவே இல்லை.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தார் தொலைபேசி பேச்சு

இந்த நிலையில், நேற்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுக்குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “வாங் யி இந்தியாவின் ஒருதலைபட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செய்யும் ஆதாரமற்ற பிரசாரத்தையும் எதிர்த்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடன் நிற்கிறது அமெரிக்கா. சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு தக்க பதில் கொடுத்தே ஆவோம் என்கிற இந்தியாவின் உறுதிப்பாட்டை, சீனாவின் இந்த நிலைபாடு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு – விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700...

சட்டமன்றம்: “முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய்...

“அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய்,...

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால்...