26
April, 2026

A News 365Times Venture

26
Sunday
April, 2026

A News 365Times Venture

Operation Sindoor: `போர் மூண்டால் இரு நாடுகளும் பாதிப்பை சந்திக்க நேரிடும்' – வைகோ

Date:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அந்த அறிக்கையில், “  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று தாக்குதல் நடத்தியது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று அழைக்கப்படும்  இத்தாக்குதல் மூலம் 9 தீவிரவாத தளங்களை இலக்குகளாக கொண்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. 

காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில்  தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  26 பேர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நமது இந்தியா இராணுவம் திட்டமிட்டு மின்னல் வேகத்தில் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்து இருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிற பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு பாடம் புகட்டி உள்ளது, வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இராணுவம் தாக்கியுள்ளது.  அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன.

“பாகிஸ்தானிய இராணுவ இலக்குகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது” என்று இந்திய இராணுவம் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்

பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, அதனால் அப்பாவி மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகும் நிலையை எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசு உருவாக்கிவிடக் கூடாது. 

போர் மூண்டால் இந்தியா ,பாகிஸ்தான் இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதையும் இந்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" – ட்ரம்ப் பேச்சு

நேற்று வாஷிங் டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது....

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம்...

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" – மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம்...

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில்...