25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

Niti Aayog: “மகனுக்காக டெல்லியில் தவம் இருக்கிறார்..'' – ஸ்டாலின் குறித்து பேசிய ஜெயக்குமார்

Date:

டெல்லியில் இன்று (மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து கேள்வி கேட்டனர்.

ஸ்டாலின்

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மூன்று ஆண்டுகளாக மாநில உரிமைகளுக்காக நிதி பெறப்படவில்லை. ஆனால், இப்போது பிள்ளை பாசத்திற்காக வெண்குடை வேந்தராக மாறிய ஸ்டாலின், டெல்லியில் தவம் இருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாக டெல்லி செல்லாதவர், இப்போது நிதி பெறுவதற்காக சென்று காத்திருக்கிறார். உப்பு தின்பவன் தண்ணி குடிப்பது போல, தப்பு செய்தவர்கள் ஓடுகிறார்கள்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

அமலாக்கத்துறை (ED) விரைந்து நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் மன்னர் குடும்பமாக தம்மை பிரபலப்படுத்தி, ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை நடத்தும் திமுகவின் முகத்திரையை அகற்ற வேண்டும். ஊழல்கள் வெளியாக சட்ட நடவடிக்கை அவசியம்” என்று விமர்சித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' – அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில்,...

"கட்சி வேறுபாடின்றி பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.!"- எம்.பி கனிமொழி

"அக்கா கனிமொழி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்...

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் – காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்'...

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்… அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை...