24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்"- ஸ்டாலின்

Date:

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்… பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.

முதல்வர் விஜய்

அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!

சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம்.

தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.

திமுக | ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு, கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!

தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி” என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்… அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை...

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில்,...

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

குடியுரிமை: “3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை…" – நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும்,...