11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' – பிரதமர் மோடி உரை

Date:

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.

சரியாக மதியம் 1 மணியளவில் பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதை முடித்துவிட்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகளைச் செய்தார்.

புதியாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் சிறப்பு ரயில் ஓட்டம்

இதையடுத்து உரையாற்றிய மோடி, “என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள்.

ராமநாத சுவாமி கோவிலில் இன்று வழிபட்ட போது ஆசிகள் நிரம்ப பெற்றவனாக நான் உணர்ந்தேன். இந்த விஷேச நாளில் ரூ. 8300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத் திறனை வலுப்படுத்தும். இந்த திட்டங்களை பொறுத்து தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் என வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை என்பதை அவரின் வாழ்வு நமக்கு காட்டுகிறது. அதே போல ராமேஸ்வரத்துக்கான இந்த புதிய பாம்பன் பாலமும்கூட தொழில்நுட்பத்தையும் பாரம்பர்யத்தையும் ஒன்று சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான ஒரு நகரம் 21ம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்படிருக்கிறது. தங்களது தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமேஸ்வரத்தில் மோடி
ராமேஸ்வரத்தில் மோடி

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மத்திய அரசு அனைத்தும் செய்தும் கூட சிலர் தமிழகத்தில் அழுது கொண்டே இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.” என்று பேசியிருக்கிறார்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்

பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க...

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்...

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப்...

"எனக்கு மட்டும் மகள் இருந்தா…" – MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது....