18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

`சவாலுக்குத் தயாரா?' – நீட் தேர்வு விவகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்

Date:

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீட் விவகாரம் குறித்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” முன்னாள் முதல்வர்கள் தலைவர் கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அவர்களின் மறைவுக்குப் பிறகு தான் நீட் தேர்வை இங்கு நுழையவிட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

பா‌.ஜ.க – வின் பாதம் தாங்கியாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.‌ பன்னீர்செல்வம் ஆகியோர் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க – வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்ற நிபந்தனையை முன்வைக்க முடியுமா ? எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டு சொல்கிறேன். நிச்சயம் இதை செய்ய மாட்டார். ஏனென்றால் அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமில்லை ” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரேமலதா விஜயகாந்திற்கு அண்ணாமலை பாராட்டு; காரணம் என்ன?

கோவை கணபதி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி...

"விஜய்க்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை" – தாடி பாலாஜி ஓப்பன் டாக்

கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் ஏற்பாட்டில் நடிகர் தாடி பாலாஜி...

”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போராடும் மீனவ கிராமம்!

பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு...