28
November, 2026

A News 365Times Venture

28
Saturday
November, 2026

A News 365Times Venture

Delimitation: “மதவாத சக்திகளுக்கு துணைபோவது முதுகில் குத்தும் செயல் இல்லையா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

Date:

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுக-வின் இந்த முடிவுக்கு அரசியல் ஆர்வலர்கள், திமுக-வின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “திரு ஸ்டாலின் அவர்களே அவசர அவசரமான திருத்தங்களுடன் பா.ஜ.க கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா மிகவும் ஆபத்தானது. மதம் மொழி, இனம், சிறபாண்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதை எல்லோருக்கும் உணர்த்திய திமுக, இன்று மதவாத சக்திகளுக்கு துணைபோவது முதுகில் குத்தும் செயல் இல்லையா? இது சுயநலமான முடிவு.

ஒட்டுமொத்தமான மக்களுக்கு துரோகம் செய்கிற இந்த முடிவை ஏற்க முடியாது. மாநில உரிமைக்கு போராடி, இந்தியாவுக்கே வழிகட்டியாக இருந்த திமுக இப்போது வரலாற்று பிழையான ஒரு முடிவை எடுக்க கூடாது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு அடுத்த தலைமுறையை தீர்மானிக்க போகும், அந்த தலைமுறை உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முடிவு.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மாநில உரிமைகளை இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக" – எம்.பி கனிமொழி

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை தூணில் தீபம் ஏற்றவேண்டும் என...

திருப்பரங்குன்றம்: மலை உச்சிக் கல் தூணில் ஏற்றப்பட்ட தீபம்; செயல்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு!

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை தூணில் கார்த்​திகை தீபம் ஏற்றவேண்டும்...

திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்… வெளியேறிய காவல்துறை!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப்...

Delimitation: “திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது" – அமைச்சர் வன்னி அரசு

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு...