28
November, 2026

A News 365Times Venture

28
Saturday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்… வெளியேறிய காவல்துறை!

Date:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்று 300 க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் திருப்பரங்குன்ற மலை முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து தமிழக காவல்துறையினர் மலையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம், மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ” தீபமேற்றும் போது திருக்கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மலை ஏற அனுமதிக்கபடுவார்கள்” என தெரிவித்திருந்தனர். இதனால்  அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தபட்டனர்.

கூடியிருந்தவர்கள் தங்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

தொடர்ந்து 3 மணியளவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ஆகியோர் மலையடிவாரத்திற்கு வந்து தூணில் தீபமேற்றுவதற்காக சென்றுள்ளனர்.

தீபமேறுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதற்காக 20 லிட்டர் நெய், 3 மணல் கனயம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன. விளக்கு ஏற்றுவதற்கு 6 தீப மிராசுகள் திருவண்ணாமலையில் இருந்து வருகை தந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி

தற்போது தூணில் கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் தீபம்  ஏற்றப்பட உள்ளது. இதைக் காண்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற நுழைவு வாயிலில் காத்திருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மாநில உரிமைகளை இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக" – எம்.பி கனிமொழி

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை தூணில் தீபம் ஏற்றவேண்டும் என...

Delimitation: “மதவாத சக்திகளுக்கு துணைபோவது முதுகில் குத்தும் செயல் இல்லையா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய...

திருப்பரங்குன்றம்: மலை உச்சிக் கல் தூணில் ஏற்றப்பட்ட தீபம்; செயல்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு!

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை தூணில் கார்த்​திகை தீபம் ஏற்றவேண்டும்...

Delimitation: “திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது" – அமைச்சர் வன்னி அரசு

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு...