11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

CPIM congress: “ஒன்றிய அரசால் அதிக பாதிப்படைவது நானும், கேரள முதல்வரும் தான்'' – முதல்வர் ஸ்டாலின்

Date:

“மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு எப்ரல் 2 முதல் 6 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ எனும் தலைப்பில் சிறப்பு கருந்தரங்கம் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

சிபிஎம்-மின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக உயர்க்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தூங்கா நகரம் இன்று சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதை பார்த்து முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். திமுக கொடியில் மட்டுமல்ல எங்களில் பாதியும் நீங்கள் தான். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் கருத்தியல் நட்பு இருப்பதால்தான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன்.

தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என அடையாளப்படுத்தி கொண்டவர் கருணாநிதி, கார்ல் மார்க்சுக்கு சிலை வைப்பதாக அறிவித்து விட்டு இங்கு வந்திருக்கும் என் பெயர் ஸ்டாலின்.

நமது பயணமும் பாதையும் மிக நீண்டது. 2019 முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும் என தீர்க்கமாக இயங்குகிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என சிலர் நப்பாசையில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. இங்கிருக்கிற யாரும் அதற்கு இடம் தர மாட்டோம். கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகி விட்டது. ஒன்றிய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், கேரள முதல்வரும் தான். எனவே எங்கள் பேச்சுக்களை வாக்கு மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

மு.க.ஸ்டாலின்

பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளை பறிக்கிறீர்கள். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறீர்கள். மாநிலங்களே இருக்கக் கூடாது என நினைக்கிறீர்கள். வக்ப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு.

மாநில சுயாட்சி எங்கள் உயிர் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. நரேந்திர மோடியின் ஆட்சிதான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த ஒன்றிய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும். ஒன்றியத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் மாநில சுயாட்சி காப்பாற்றப்படும்.

பிரகாஷ் காரத், மு.க.ஸ்டாலின், பினராயி.விஜயன்

ஒன்றிய, மாநில அரசு உறவை மேம்படுத்த சர்க்காரியா, பூஞ்சி கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என 2012-ல் முதல்வராக இருந்த மோடி கேட்டார். மூன்றாம் முறையாக பிரதமராகி உள்ள மோடி அவர்களே, உங்கள் கோரிக்கை மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவோம். இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்

பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க...

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்...

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப்...

"எனக்கு மட்டும் மகள் இருந்தா…" – MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது....