18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

Date:

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார்.

CM Vijay

சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அதி கனமழை பொழிந்திருந்தது. அதிகபட்சமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பொழிந்திருந்தது. இன்றும் இரவுக்கு மேல் சென்னையில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் செயல்பட்டு வரும் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்திருக்கிறார். முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் ஆகியோர் உடனிருந்தனர். தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் முதல்வருக்கு மழை வெள்ள நிலவரத்தை எடுத்துக் கூறினர்.

CM Vijay
CM Vijay

குறிப்பாக, மழை வெள்ளம் தேங்கியிருந்த 95% இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டிருப்பதாக முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்கள், உணவு தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சமையற் கூடங்கள் போன்றவற்றை பற்றியும் முதல்வருக்கு விளக்கியிருக்கின்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர், ‘மழை வெள்ளத்தால் மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாததை உறுதி செய்யுங்கள்’ என அறிவுரை கூறிவிட்டு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைத்தட்டி பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரான்ஸ் கலவரம்: தீக்கிரையான 140 ஆண்டுக்கால வரலாற்றுக் கட்டடம்; சூறையாடப்பட்ட கடைகள்.. பின்னணி என்ன?

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களில்...

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' – மேயர் பிரியா!

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும்...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர்...

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு...