18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

பிரான்ஸ் கலவரம்: தீக்கிரையான 140 ஆண்டுக்கால வரலாற்றுக் கட்டடம்; சூறையாடப்பட்ட கடைகள்.. பின்னணி என்ன?

Date:

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களில் வன்முறையாக மாறியுள்ளது. கடைகள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகராட்சி அலுவலகம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் கலவரம்

கலவரத்துக்குக் காரணம் என்ன?

பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் கொள்கைகள் மீதான அதிருப்தியும் இந்தப் போராட்டங்களில் எதிரொலித்தது. ஏற்கெனவே எரிபொருள் வரிக்கு எதிராக போராடிய Yellow Vest இயக்கத்தினர், ‘மஞ்சளும் இளைஞர்களும்’ (Yellow and Youth) என இந்தப் போராட்டங்களுக்கு இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின்படி, சுமார் 5.5 லட்சம் பேர் இப்போராட்டங்களில் பங்கேற்றதாக தெரிகிறது . ஆனால் இதில் பங்கேற்ற CGT தொழிற்சங்கமோ 8 லட்சம் பேர் பங்கேற்றதாக தெரிவித்ததுள்ளது.

பிரான்ஸ் கலவரம்

தீக்கிரையான வரலாற்றுக் கட்டடம்!

பிரான்ஸின் லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்துள்ள 140 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான நகராட்சி அலுவலகம், கலவரத்தின்போது தீக்கிரையாகியுள்ளது. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் கட்டடத்துக்குள் புகுந்து தீ வைத்ததாக அப்பகுதியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கட்டடம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

ஆடம்பரக் கடைகளிலும் கொள்ளை!

தலைநகர் பாரிஸ் (Paris) உள்ளிட்ட பல நகரங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், ஆடைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் சூறையாடப்பட்டன. ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையங்களும் தாக்கப்பட்டன.

சிலர் பாதுகாப்புக் கண்காணிப்பு கேமராக்களைத் துண்டித்துவிட்டு, கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

.

1,200 பேர் கைது!

வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கிகளையும் பயன்படுத்தினர். போராட்டக்காரர்கள் பொருட்களை வீசியதுடன், பட்டாசுகளையும் பயன்படுத்தினர்.

பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு (Sébastien Lecornu) சனிக்கிழமை இரவு தெரிவித்த தகவலின்படி,

1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 காவல்துறையினர் காயமடைந்தாக தெரிவித்துள்ளார். சென்-எத்தியென் நகரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கையெறி வகைக் குண்டு வெடித்ததில், 17 வயது சிறுவனின் வலது கை துண்டிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபர் எச்சரிக்கை!

அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும் கொள்ளையில் ஈடுபட்டவர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பிரான்ஸின் பல நகரங்களில் வன்முறையாக மாறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் தீக்கிரையானது, கடைகள் சூறையாடப்பட்டது, காவல்துறையினர் காயமடைந்தது எனப் போராட்டத்தின் தாக்கம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளது. மக்களின் அதிருப்தி வீதிப் போராட்டங்களாக வெடித்துள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மேகவெடிப்பு அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" – அன்புமணி சொல்வது என்ன?

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு...

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின்...

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' – மேயர் பிரியா!

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும்...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர்...