6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

Date:

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 1,15,523 பெண் வாக்காளர்கள், 1,06,875 ஆண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தாராபுரம் தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம் இடைத்தேர்தல்

இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் 3,500 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து காண்காணிப்பட இருக்கின்றன. அக்டோபர் -9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" – கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று...

"போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை… தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?"- திமுக கேள்வி

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த...

நூலக நூல் கொள்முதல் ஊழல்: “அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்…" – சிபிஎம் சண்முகம்

கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான...

ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!

சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி...