5
October, 2026

A News 365Times Venture

5
Monday
October, 2026

A News 365Times Venture

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" – திமுக எம்.பி. கனிமொழி

Date:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தவெக பணப் பட்டுவாடா செய்கிறது.

முதல்வர் விஜய்

வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது. இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்காக அதிகமாகப் பிரசாரம் செய்யாத முதலமைச்சர் தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறார் என்றால் தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

தவெகவுக்குப் பாடம் சொல்லி தரக்கூடிய அளவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அவர்கள் கூட்டணியில் இருப்பவர்களே விமர்சனம் செய்யக்கூடிய அளவுக்குத்தான் இருக்கிறார்கள்.

நாங்கள் எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என்று மேடைக்கு மேடை பேசினால் மட்டும் போதாது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பாதுகாப்பு இல்லை. குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.

மக்கள் ஒரு அச்சத்துடன் வாழக்கூடிய சூழல் நிலவுகிறது. வளர்ச்சிக்கானத் திட்டங்கள் எதுவும் கிடையாது” என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" – மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு...

'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' – நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?

கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது....

ஞானேஷ் குமார்: `சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், ரத்து நடவடிக்கை.!' – உச்ச நீதிமன்றம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள மிக முக்கியமான வழக்கில்,...

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ – கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின்...