6
May, 2026

A News 365Times Venture

6
Wednesday
May, 2026

A News 365Times Venture

BJP: தமிழ்நாட்டில் பாஜக வாஷ் அவுட்டா? அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு; கலக்கத்தில் கமலாலயம்!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கடும் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பா.ஜ.க, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தனது செல்வாக்குமிக்க இடங்களில்கூட முன்னிலை பெற முடியாமல் திணறி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விடப் பின்தங்கியுள்ளனர்.

குறிப்பாக, நகர்ப்புற மற்றும் இளைஞர்களின் வாக்குகள் த.வெ.க பக்கம் சாய்ந்ததும், கிராமப்புறங்களில் தி.மு.க-வின் பலமான வாக்கு வங்கி நிலைத்து நிற்பதும் பா.ஜ.க-வின் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வானதி சீனிவாசன்

அ.தி.மு.க கூட்டணியில் இருந்தும், வாக்குகள் சரியாகப் பரிமாற்றம் செய்யப்படாதது மற்றும் தேசிய அரசியல் போக்குகளுக்கு எதிராகத் தமிழக மக்களின் மனநிலை இருப்பது அக்கட்சியின் பின்னடைவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

பல தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்த திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

குறிப்பாக பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்களான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் தொடர் பின்னடைவு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`சிதம்பரத்தில் போட்டியிடுங்கள் என்றேன்; ஸ்டாலின் அண்ணனோ…' – தமிமுன் அன்சாரி

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக ஸ்டார்...

ஆட்சி மாற்றத்தால் காவல்துறையில் நிகழவிருக்கும் அதிரடி: பதவிக்காக காய்நகர்த்தும் அதிகாரிகள்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பவர்ஃபுல் பதவிகளைப்...

“நள்ளிரவில் டெல்லிக்கு சென்ற போன் கால்.!” – க்ரீன் சிக்னல்; செய்து முடித்த ஆதவ், ஜான்

`ஆட்சியில் பங்கு' என்கிற காங்கிரஸ் கட்சியின் கனவு நினைவுக்கு வருகிறது. ராகுலின்...

மானாமதுரை: முன்னாள் அமைச்சர் தமிழரசியை வீழ்த்தி மகுடம் சூடிய ‘போட்டோகிராபர்’ – யார் இந்த இளங்கோவன்?

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான...