28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

`தேமுதிக-வுக்கு இப்போது இல்லை; 2026-ல் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும்' – அதிமுக அறிவிப்பு

Date:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ உட்பட தமிழ்நாடு எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், காலியாகும் இடங்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என்பது கடந்த சில தினங்களாகவே தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் பேசுபொருளாக இருந்தது.

இதில், தி.மு.க-வுக்கான 4 இடங்களில் 3 இடங்கள் சொந்த கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கும், ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒதுக்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி

மறுபக்கம், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதியின்படி தே.மு.தி.க-வுக்கு ஒரு சீட் கொடுக்கப்படும் என்பது பேசுபொருளாக இருந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்பு கூட, தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை என்றும், அது 2024 தேர்தலின்போதே முடிவு செய்யப்பட்டது என பிரேமலதா கூறியிருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்கான இரண்டு இடங்களுக்கு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், தே.மு.தி.க-வுக்கு இப்போது சீட் ஒதுக்கப்படவில்லையென்றாலும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருக்கிறார்.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலும், “அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும்.

2026-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது தே.மு.தி.க-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க வழங்கும்” என்று எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த முதல்வர் விஜய் | Photo Album

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர்...

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? – கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் விளக்கம்

மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத்...

டெல்லி சிறப்புப் பிரதிநிதி: “முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' – சிபிஐ வீரபாண்டியன்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் கே.வெங்கட...

'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல்,...