25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ – ஒமர் அப்துல்லா காட்டம்

Date:

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

சிந்து நதி

அதே நேரம் ஜம்மு காஷ்மீரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பல்வேறு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் நேற்று ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரைப் பொறுத்தவரை, அனைத்து நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்கட்டும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஆவணம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவால் ஏற்படவிருக்கும் நீண்ட கால தாக்கங்கள் என்ன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர்

திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும்...

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது...

'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம்

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர்...

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! – யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள்...