25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம்

Date:

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டடிருக்கும் பதிவில், “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?

பாலியல் வன்கொடுமை

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! – யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள்...

"வாக்குரிமையை பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறார்"- மாணிக்கம் தாகூர்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான...

இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம்… விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அலட்சியமா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு...

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி...