28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

சேலம் வெடி விபத்து: 'முறையானப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை' – திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

Date:

சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக பாட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், திமுக அரசைக் கண்டித்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

சேலம் வெடி விபத்து

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அலட்சியப் போக்கு

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்,கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.

எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxsஎடப்பாடி பழனிசாமி


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்தியா – வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில்...

'இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்ட வகுப்பு சான்றிதழ் கிடையாது’ – நீதிமன்றம் சொல்வது என்ன?

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்...

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET),...