5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

"இந்த ரயில் நிலையத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக்கூடத் தமிழ் புரியல…" – துரை வைகோ வேதனை

Date:

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 24) திடீர் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, ரயில் நிலையம் பராமரிக்கப்படுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, ”பிரதான நுழைவாயில்ல ரெண்டு புறமுமே குப்பைக் குவியல்கள்தான். நடைமேடைகளில் பல இடங்களில் விளக்குகள் எரியலை, மாலை வேளையில் இரயில் நிலையத்தின் பல இடங்கள் இருளில் மூழ்கியிருக்கு.

நிலைய மேலாளர் அவரது உதவியாளர் என ரெண்டு பேருதான் பணியில் இருந்தாங்க. இருவருமே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயணிகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக்கூட மொழி புரியாதவர்களா இருக்காங்க.

துரை வைகோ எம்.பி

முதல் நடைமேடையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் அது சுத்திகரிக்கப்படாத உப்பு நீர். குடிநீரைக்கூட வழங்க முடியாத நிலையில் இரயில்வே இருப்பது பெருங்கொடுமை.

2வது நடைமேடையில் குடிநீர் இணைப்பே இல்லை. கழிவறைகளின் நிலையும் படுமோசம். பெண்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லைன்னு பெண் பயணிகள் புகார் தெரிவிச்சாங்க.

விசாரிச்சா, ஒரே ஒரு தூய்மைப் பணியாளர்தான் பணிக்கு வர்றதாகவும், அவரும் முறையா வர்றதில்லனும் தெரியவந்தது. 

கேண்டீன் வசதி இல்லாததால், ரயில் நிலையத்தைக் கடந்து போறவங்க ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாத நிலைதான் இருக்கு. இரவு நேரங்கள்ல சமூக விரோதிகளின் நடமாட்டம் இருக்குனு புகார்.

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

நான்கு ரயில்வே காவலர்கள் பணியில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், நான் போனப்ப ஒரு காவலர்கூட பணியில் இல்லை.

சிறிது நேரம் கழித்து வந்த ஒரு காவலர், 12 மணி நேரம் தொடர்ந்து பணியமர்த்த படுவதாக தெரிவித்தார். இது உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல, மனிதாபிமானத்திற்கு எதிரானதும் கூட.
‘இதைப் பத்தி ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசி, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லையா’ன்னு கேட்டா, அவர் மௌனமாக இருந்தார்.

தனிமனிதர்களைக் குற்றம்சாட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தென்னக இரயில்வே துறையின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்குனு தெரியலை. மக்களின் பிரதிநிதியாகக் இதைக் கேள்வி கேட்க வேண்டியது என் கடமை.

அடுத்த ஆய்வில் நான் பாராட்டும்படியாக இருக்கணும்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட கண்டிப்புடன் வலியுறுத்தி விட்டு வந்திருக்கேன்” என்கிறார் இவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Kerala: "மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க" – பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்....

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! – இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது....