22
August, 2026

A News 365Times Venture

22
Saturday
August, 2026

A News 365Times Venture

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." – மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

Date:

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

மதிமுக

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) ம.தி.மு.க நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பிறகு ம.தி.மு.க முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, “நான் எடுத்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று இந்தக் கூட்டத்தில் துரை வைகோ கூறினார். மல்லை சத்யாவும்- துரை வைகோவும் பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.

இருவரும் மனம் திறந்து பேசினார்கள். உள்ளம் திறந்து பேசினார்கள்.

தங்கள் உணர்வுகள் ஆவேசத்தின் வடிவில் வந்த வார்த்தைகள் போன்றவற்றை இருவருமே நாகரிகமான முறையில் கையாண்டார்கள்.

கட்சிக்கும், முதன்மைச் செயலாளருக்கும் இனி உறுதுணையாக செயல்பாடுவேன் என்று மல்லை சத்யா அவர்கள் கூறியிருக்கிறார்.

மதிமுக
மதிமுக

துரை வைகோ அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், ‘நடந்து முடிந்தது, முடிந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்கட்டும்’ என்று கூறினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்கள்.

எனது வலது பக்கத்தில் துரை துரைவைக்கோவும், இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

யார் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இருக்கிறது? முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்? – பெ.சண்முகம் கேள்வி

இடதுசாரி இயக்கங்களோடு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று சமீபத்தில் கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை...

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" – சென்னையில் பிரகாஷ் ராஜ்

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும்,...

"மறைக்கத் தேவையில்லை; நம் தோல்விக்கு நிர்வாகிகளும் காரணம்; அதனால் தான்.!" – ஸ்டாலின் ஓப்பன் டாக்

இன்று சென்னை அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டச் செயலாளர்களின்...

`இனி மா.செ எண்ணிக்கை 110… அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' – திமுக செயற்குழுவில் அதிரடி

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும்...