20
October, 2026

A News 365Times Venture

20
Tuesday
October, 2026

A News 365Times Venture

Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

Date:

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் திரையரங்குக்கு எதிராக வசைகளை பொழிய திரையரங்கு நிர்வாகம் இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறது.

திரையிடப்பட்ட மேஷ் அப்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த நடிகர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தும்படி மேஷ் அப்களை திரையிடுவது வழக்கம். அந்தவிதத்தில் அம்பத்தூரில் உள்ள முருகன் திரையரங்கில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படிக்கு ஒரு மேஷ் அப் திரையிடப்பட்டிருக்கிறது.

அதில், முன்பொரு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் அவரின் தந்தை எஸ்.ஏ.சியும் ரஜினியின் காலில் விழுந்து வணங்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. முதல்வரை இப்படி தரக்குறைவாக சித்தரித்து திரையரங்கில் திரையிடலாமா என உஷ்ணமாகிவிட்டனர். திரையரங்கை டேக் செய்தும் வசை மொழிகளை பொழிந்தனர். உச்சக்கட்டமாக அமைச்சர் ராஜ்மோகன், சி.டி.ஆர்.நிர்மல்குமாரை டேக் செய்து திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்குமாறும் நூற்றுக்கணக்கான ட்வீட்களை இறக்கினர்.

CM Vijay
CM Vijay

பதறிப்போன திரையரங்க நிர்வாகம், ‘தவறான மேஷ் அப் வீடியோவை திரையிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதை வேண்டுமென்று செய்யவில்லை. அந்த மேஷ் அப்பால் மனம் புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மேஷ் அப்பை திரையிடுவதை நிறுத்திவிட்டோம்’ எனக் கூறியிருக்கின்ற னர். ‘எங்களை பகைச்சுக்கிட்டு எங்களோட NOC இல்லாம ஊருக்குள்ள தொழில் நடத்த முடியுமா?’ என விர்ச்சுவல் வாரியர்ஸ் பெருமிதமாக ட்வீட் செய்து வருகின்றனர். உணர்ச்சிவசத்தை கொஞ்சம் அடக்குங்க பாஸ்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX)...

புதிய பேருந்து நிழற்குடை கோரும் மக்கள் – நாச்சியாபுரத்தில் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது...

தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைது! என்ன நடந்தது?

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர்...

முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி – வைரலாகும் வீடியோ

சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும்...