15
April, 2026

A News 365Times Venture

15
Wednesday
April, 2026

A News 365Times Venture

கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: "சேகர் பாபு மன்னிப்பு கோர வேண்டும்" – நயினார் நாகேந்திரன்

Date:

இன்று (ஏப்ரல் 17) சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது, கருணாநிதியின் சமாதியின் மேல் பகுதியில், பூக்களால் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்…

‘சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்’ – நயினார் நாகேந்திரன்

“மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலயம் அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

‘பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி’ என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராகப் பதவியில் இருக்கும் திரு. சேகர்பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளைச் சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும், அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருப்பதாவது…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தென்மாநிலங்களின் உரிமைக்கே உலையா?' – தொகுதி மறுவரையறை: அவசியமா… ஆபத்தா?

எதிர்க்கும் கட்சிகள்தொகுதி மறுவரையறைமத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) முதல் 18...

Delimitation: "அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இபிஎஸ் என்ன ஒலிபெருக்கியா?" – ப.சிதம்பரம் கேள்வி

கோவை தனியார் ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச்...

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,...