15
April, 2026

A News 365Times Venture

15
Wednesday
April, 2026

A News 365Times Venture

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவால் முற்றுகை; இருந்தும், சீன கப்பல் பயணிக்கிறது – இது எப்படிச் சாத்தியம்?

Date:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் உள்நுழையவும், வெளியே போகவும் முடியாதவாறு அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க நேரப்படி, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) காலை 10 மணி முதல், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டது அமெரிக்கா கப்பற்படை.

இந்தச் சூழலில், சீனாவின் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போது பயணித்து வருகிறது. அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்த பிறகு, கப்பல் ஒன்று அந்தப் பாதையில் பயணிப்பது இதுவே முதன்முறை.

ஹார்முஸ் ஜலசந்தி

அமெரிக்கா தடை விதித்த கப்பல்

சீனாவின் இந்தக் கப்பல் பெயர் ரிச் ஸ்டாரி. டெஹ்ரானின் எரிசக்தியை தொடர்ந்து ஈரானில் இருந்து சீனாவிற்கு கொண்டு சென்றதால், 2023-ம் ஆண்டு இந்தக் கப்பலுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கிறது மட்டுமில்லாமல், அமெரிக்கா தடை விதித்த கப்பல் என்பதால், இந்தக் கப்பலின் பயணம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கப்பல் ஈரான் துறைமுகத்திற்குச் சென்றதா… அல்லது சரக்குகளை கொண்டு பயணித்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எப்படி பத்திரமாக வந்தது?

அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி மூடல் அறிவிப்பை அறிவிப்பதற்கு முன், இந்தக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்திருக்கிறது.

தடை அறிவிப்பு வந்ததும், மீண்டும் அது யு-டர்ன் போட்டு ஹார்முஸ் ஜலசந்திக்கு எந்த வழியாக உள்நுழைந்ததோ, அங்கேயே திரும்பி சென்றுள்ளது.

அங்கே, இந்தக் கப்பல் சீனாவிடனுடையது என்று அறிவித்த பின்னர், பத்திரமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் பயணித்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,...

​"சங்கி கூட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் நம் முதல்வர்தான்" – உதயநிதி பெருமிதம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி...

Delimitation: '39 தொகுதிகளுக்குப் பதில் தமிழ்நாட்டிற்கு வெறும் 46; உபிக்கு 140ஆ?' – சீறும் தலைவர்கள்

நாளை நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல்...