26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

`மாநகராட்சியாக மாறும் புதுச்சேரி நகராட்சிகள்!' – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Date:

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.

புதுச்சேரி அரசு

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “நீட் பயிற்சி பெறுவதற்கு இதுவரை 585 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் இரண்டு, கிராமப்பகுதிகளில் இரண்டு மற்றும் காரைக்காலில் ஒரு நீட் பயிற்சி மையங்கள் அரசு சார்பில் உருவாக்கப்படும். மேலும் 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும்...

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...