26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

இனி ஆண் பணியாளர்களுக்கும் `மகப்பேறு விடுப்பு' – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு… விவரம் என்ன?

Date:

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாள்கள் ‘தந்தையர் மகப்பேறுகால விடுப்பு’ வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசாணையின் செய்தி வெளியீட்டில், “தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.

Child Birth

குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.

எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாள்கள் “தந்தையர் மகப்பேறுகால விடுப்பு” (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ துய்த்துக் கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் … பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரைச் சந்தித்திருக்கும்...

“ `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக...

`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' – தமிழ்நாடு அரசு அறிவிப்பு – முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில்...

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம்...