26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

“ `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

Date:

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஊழல் என்பது பழைமையான விஷயம்தான். ஆனால், மக்கள் அதற்குப் பழகிப்போய்விட்டார்கள் என்று நினைத்து, நம்மால் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்தலாம்.

முதல்வர் விஜய்

அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால்தான், இங்கே சிலருடைய அடித்தளமே ஆடிப்போய்க் கிடக்கிறது. இப்போது சமீபத்தில் கல்வியிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்றால், அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? கல்வித் துறைதானே எல்லாவற்றுக்கும் ஓர் அடித்தளம்? பள்ளிப் பாதுகாப்பில் வந்த ஊழலால்தான் கும்பகோணம் பள்ளி விபத்து நடந்தது. இப்போது நினைத்தால்கூட மனம் பதறுகிறது. `என் மேசையில் மூன்று ஃபைல்கள் இருக்கின்றன’ என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, `அதைத் திறங்களேன்… திறந்துதான் பாருங்களேன்!’-ன்னு சொன்னாங்க. `சரி’னு திறந்தோம். அதைதான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

பிள்ளைகள் படிக்கும் நூலகப் புத்தகங்களில்கூட ஊழல் செய்திருக்கிறார்கள். சத்தியமாக இவர்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் வைப்பது, என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த முறைகேடு வெளியே வருகிறது. இன்னும் மற்ற நூலகங்களிலெல்லாம் என்னென்ன நடந்திருக்கிறதோ, ஒவ்வொன்றாக வெளியே வரும். இதெல்லாம் அறிவு உலகமா இல்ல ஊழல் உலகமான்னு எனக்குத் தெரியவில்லை. நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்துக்காகவும்தான். உங்கள் வாழ்க்கை பாதிக்கிற அளவுக்கு இப்படி எதையும் நடக்கவிடமாட்டேன்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' – தமிழ்நாடு அரசு அறிவிப்பு – முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில்...

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம்...

“தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" – நயினார் நாகேந்திரன்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற...

“வட கர்நாடகா தனிமாநில கோரிக்கை 5 – 10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும்" – பாஜக எம்.எல்.ஏ பேச்சு

வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் கோரிக்கை, 5 முதல் 10...