26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!

Date:

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2-ம் தேதியும் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் அமர்வுகள் முடிவடைந்து 105 நாள்கள் கடந்த நிலையிலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதை இன்னும் முறையாக முடிக்கவில்லை.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, 2023 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கு ஏதுவாக ‘2026 அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதாவை’ பாஜக தலைமையிலான அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வரைவுகளில் ஒன்றான இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டன.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பலம் இல்லாததால், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாலேயே, மழைக்காலக் கூட்டத்தொடரை முறையாக முடிக்காமல் வைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. புதிய கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 14 நாள்கள் முன்னறிவிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' – தமிழ்நாடு அரசு அறிவிப்பு – முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில்...

“தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" – நயினார் நாகேந்திரன்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற...

“வட கர்நாடகா தனிமாநில கோரிக்கை 5 – 10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும்" – பாஜக எம்.எல்.ஏ பேச்சு

வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் கோரிக்கை, 5 முதல் 10...

“ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" – திருமாவளவன் கேள்வி

ஆட்சியர் விவகாரத்தை தொடர்ந்து பேசிவருவதன் மூலம் ஆட்சியருக்கு நெருக்கடியை உள்ளாக்குகிறார்களா? என...