16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

திருச்செந்தூர்: "ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி" – சேகர்பாபு விமர்சனம்

Date:

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருப்பதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

“தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்து சென்று முதல்வருக்கு அரோகரா… அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்கிறார் ஒருவர். இன்னொருவர் சொல்கிறார் வேலை வாங்கி எப்படி முருகன் பாலகனாக இருந்து சூரனை வதம் செய்தாரோ, அது போல் வேல் பெற்று வதம் செய்த கடவுள் தமிழக முதல்வர் என்று வர்ணிக்கின்றார். அடுத்து துறையினுடைய அமைச்சர், வேலையும் சேவல் கொடியையும் இரண்டு கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

வேலை வாங்குபவர் சட்டை இல்லாமல் வெறும் உடம்போடுதான் வேலையும் சேவல் கொடியையும் வாங்க வேண்டும். வேலை வாங்குகின்ற ஆகமம் எங்குமே இல்லை. அந்த வேலை பிடிப்பதும் வேலை கொண்டு சூரசம்ஹாரம் செய்வதும் அந்த திருக்கோவிலினுடைய அர்ச்சகர்கள், திருக்கோவிலுக்கு சொந்தமானவர்கள் தான், அந்த பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இவர் வேலை கையில் பிடித்துக்கொண்டு சேவல் கொடியை கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்கள் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்ஹார விழா அல்ல, ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

நாங்களும் ஐந்து ஆண்டுகள் அனைத்து திருக்கோயில்களிலும் எங்குமே சமயங்களை மீறவில்லை, ஆகம விதிகளை மீறவில்லை. எங்குமே எங்கள் முதல்வரின் புகழ் பாடவில்லை. இறைக்கடவுளின் புகழைத்தான் நாங்கள் பாடினோம். ஆன்மிகத்துக்கு எதிரான அரசு என்று சொன்ன அந்த ஆட்சியில் ஆகமம் பின்பற்றப்பட்டது. திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள் முழுமையாக போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டர்கள். இந்த ஆட்சி கலப்பட ஆட்சி, அதற்கு நடைபெற்ற சூரசம்ஹாரமே சாட்சி” என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில்...

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' – கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக...

'தமிழகத்தில் மோசமான ஆட்சி; விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது.!' – மு.க ஸ்டாலின் பேச்சு

சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற திமுக...