கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, ” கே.என். நேருவும் திமுகவும் எப்படி பிரிக்க முடியாததாக இருக்கிறதோ அதேபோன்று உங்களுடைய மண வாழ்க்கை, அதே உறுதியோடு, அன்போடு இருக்க வேண்டும். எந்த வேலையை சொன்னாலும் மிகச்சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர் தான் அண்ணன் நேரு.
கடைசி நேரத்தில் ஒரு மாநாடு வேலையை கொடுக்க வேண்டும் என்றால் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நேருவை தான் அழைத்துச் சொல்வார். எந்த நேரத்தில் சொன்னாலும் அந்த மாநாடை சிறப்பாக செய்துக்காட்டக் கூடியவர்.
அதிமுகவாக இருந்தாலும் சரி… தவெகவாக இருந்தாலும் சரி.. திமுக இல்லாத எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு எப்போதும் இருக்கும்; எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் அவர் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




