16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

'தமிழகத்தில் மோசமான ஆட்சி; விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது.!' – மு.க ஸ்டாலின் பேச்சு

Date:

சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆறு மாத காலமாக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை ஆட்சி என்று சொல்லக்கூடாது. அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

வெத்துவேட்டாக்காக ஒரு சீன் காட்டிக்கொள்வதுபோல் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள் ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் உருவாகி இருக்கிறது. திரையிலே கதாநாயகனாக நடித்து, நிஜத்திலே வில்லனாக உலாவி வருபவர் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.

எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருந்துகொண்டு இருக்கிறார்கள். அண்மையில் காரமடை ஒன்றிய செயலாளர் தலைமறைவாகி இருக்கிறார்.

முதல்வர் விஜய்

தவெக கட்சியின் பெயரை மாற்றி, பாலியல் சுரண்டல் கழகம் என்று பெயரை வைக்கவேண்டிய சூழல் உருவாகும். தூய சக்தி தூய சக்தி என்று சொல்லி இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனு கொடுக்க வந்தவரையே துணை சபாநாயகர் தாக்கிய வீடியோ காட்சியை பார்த்திருப்பீர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது, அதை வெளியில் கொண்டு வந்தவர் கனிமொழி தான் . அதன் பின் தான் அந்த தகவல் வெளியில் வந்தது. இதை பற்றி கூட கேட்டால் முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்கிறார்.

சில அமைச்சர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது” என பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஆட்டம் போடலாம்னு நினைச்சா.!' – விஜய் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறார்களா தவெகவினர்?

இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி அறுபதாண்டு தமிழக அரசியலை மாற்றி ஆட்சி...

பிரேக் குறைபாட்டுடன் 463 கி.மீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவு… என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே...

லலித் மோடி: ''இங்கிலாந்துதான் என் வீடு!'' – இந்தியாவில் விசாரணை ; இங்கிலாந்தில் குடியுரிமை

16 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியவர்; லண்டனில் குடியுரிமை பெற்று...