அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக்கையும் திறமையையும் பாராட்டும் விதமாகவே பயன்படுத்தினார்.
White House-ல் AI சந்திப்பு!
செப்டம்பர் 29-ம் தேதி White House-ல் AI துறையின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் Trump சந்திப்பு நடத்தினார். Google-ன் Sundar Pichai, Meta-வின் Mark Zuckerberg, Nvidia-வின் Jensen Huang, OpenAI-ன் Greg Brockman, Anthropic-ன் Dario Amodei உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்பத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் AI-ன் பாதுகாப்பு, நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் AI வளர்ச்சிக்கான கட்டுப்பாடுகள் குறித்து பேசப்பட்டது. முன்னணி AI நிறுவனங்கள் தங்களது AI அமைப்புகளுக்கு உள்கட்டுப்பாடுகளை உருவாக்குவதுடன், independent auditors மூலம் அவற்றை மதிப்பாய்வு செய்யும் தன்னார்வ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன.
“This guy is a monster!”
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Trump, Pichai-ஐ சுட்டிக்காட்டி, “This guy is a monster, and nobody knows him” என்று கூறினார். சுந்தர் பிச்சையின் பெயர் மற்றும் அவருடைய மிகப்பெரிய தொழில்நுட்ப செல்வாக்கு குறித்து Trump தொடர்ந்து பாராட்டிப் பேசினார்.
COMEDIC GOLD OUTSIDE THE WHITE HOUSE!
TRUMP: “Sundar [Pichai], you wanna say something?”
PICHAI: “First of all, thanks—”
TRUMP: “This guy is a MONSTER, and nobody knows him. What a great life! To be a MONSTER and not have to go through this. All you have to know… pic.twitter.com/pIAP5vg4oN— Wiki Leaks 2 (@WikiLeaksQ2) September 29, 2026
Trump-ன் இந்த வித்தியாசமான பாராட்டைக் கேட்ட சுந்தர் பிச்சை சிரித்தபடி பதிலளித்தார். “Hopefully a better tagline than I’m a monster!” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். இந்தச் சிறிய உரையாடல்தான் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் உலகின் முன்னணி AI நிறுவனங்கள் பாதுகாப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபுறம் Google CEO-வை Trump “Monster” என்று அழைத்த இந்த எதிர்பாராத தருணம் White House சந்திப்பின் வைரல் காட்சியாக மாறியுள்ளது.




