15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

Date:

பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உறுதியளித்திருந்தார்.

பாலியல் வன்முறைகள்

இதையடுத்து கடந்த வாரம் ஆசிரியர்கள் மீது இருக்கும் பாலியல் புகார்களை தூசி தட்டி எடுத்தது பள்ளிக் கல்வித்துறை. அதில் கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் பாலியல் புகார்களில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர், அவர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

தற்போது அதனடிப்படையில் பாலியல் புகார்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பள்ளிக் கல்வித் துறை

திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஓர் ஆசிரியர் என 7 பேர் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இறங்கியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் இன்னும் பல ஆசிரியர்கள் மீது விசாரணைகளும், அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" – நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து...

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" – ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய்...

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' – பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி...

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' – முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு...