15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" – நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

Date:

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?

காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, 5 மாதக் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவைப் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள்தாம் பாஜகவினர்.

பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும்தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.

திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்”


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பூர்: 80 வது சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்! | Photo Album

"பயமா? பதற்றமா?" - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற...

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" – ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய்...

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' – பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி...

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' – முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு...