15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" – ராஜ்மோகன் கண்டனம்

Date:

“சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நயினார் நாகேந்திரன்

அதற்கு பதிலளித்த அவர், “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாகப் பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது.

விரைவில் திமுக – பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும். திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாகப் பேசி வருகின்றனர். சத்தமின்றி சாதனைகளை நிகழ்த்தும் முதலமைச்சர் விஜய்.

மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

ராஜ்மோகன் - தவெக
ராஜ்மோகன் – தவெக

இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது எனப் பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" – நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து...

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' – பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி...

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' – முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு...

"திமுக – அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" – திமுக எம்.பி கனிமொழி பளீச்

அதிமுக - திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது...