29
July, 2026

A News 365Times Venture

29
Wednesday
July, 2026

A News 365Times Venture

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் – சாதிய மோதலா? தீவிர விசாரணை!

Date:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருடன் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர், அங்கு கிடந்த மரக்கட்டையால் சக மாணவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆசிரியர்கள் தலையிட்டு காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த மோதலுக்கு சாதிய பின்னணி ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் நடப்பது வாடிக்கை. ஆனாலும் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, காவல்துறை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவியது. இந்த நிலையில், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் மீண்டும் அத்தகைய சூழல் உருவாகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “மாணவர்களுக்குள் வகுப்பறையில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டைதான் இது. இதில் எந்தவிதமான சாதிய பின்னணியும், சாதிய மோதலும் இல்லை. எந்த முன் விரோதத்தாலும் இந்த முதல் நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

நெல்லை

இந்த மோதல் தொடர்பாக தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், “என் மகன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் சக மாணவனால் தாக்கப்பட்டுள்ளார். என் மகனை சில வாரங்களாகவே குறிப்பிட்ட மாணவன் அடிப்பது, அவதூறாகப் பேசுவது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது என தொந்தரவு செய்து வந்துள்ளார். அதை எதிர்த்துக் கேட்டதால் கடுமையாக தாக்கியுள்ளனர். என் மகனின் காதில் ரத்தம் வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு மாணவன் செய்திருக்க முடியாது. இதன் பின்னணியில் உள்ள மாணவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் உறவினர் கூறுகையில், `மூலக்கரைப்பட்டி பள்ளியில் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அங்குள்ள தலைமையாசிரியருக்கும் இது தெரியும். ஆனால் அவரால் அதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. அங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியதால் என் மகனை பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் சேர்த்தேன். அது போல எல்லோராலும் செய்ய முடியாது என்பதால், அந்தப் பள்ளியில் மாணவர்களைப் பாதுகாக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

நெல்லையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவன் தாக்குதலுக்குள்ளான சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' – திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில்...

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 – விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு...

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை – CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி...

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' – முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக்...