17
July, 2026

A News 365Times Venture

17
Friday
July, 2026

A News 365Times Venture

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Date:

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக இந்த வகை மதுபானக் கூடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் விக்னேஷ்

இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ – பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' – உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற...

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி...

“இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" – கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று...

பாமக: “தமிழ்நாட்டின் உண்மையான விடுதலை மே 4-தான்; ஊடக சுதந்திரம் இருக்கிறது" – அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது....