16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

'ஆபரேஷன் Toofan' – தமிழக முதல்வரை திடீரென சந்திக்கும் கேரள உள்துறை அமைச்சர்! – பின்னணி என்ன?

Date:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக ‘ஆபரேஷன் Toofan’ இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன் பின்னணி என்ன?

ரமேஷ் சென்னிதலா

கேரளத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து வி.டி.சதீஷன் முதல்வரானவுடன், இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் போதைப் பழக்கத்தை ஒழிக்கவும், போதைப் பொருள் நெட்வொர்க்குகளை கண்டறிந்து வீழ்த்தவும் ‘ஆபரேஷன் Toofan’ என்ற பெயரில் ஒரு மிஷன் தொடங்கப்பட்டது.

இதில் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூடுதல் கவனம் செலுத்தி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ‘மரணத்தின் தூதுவர்களுக்கு எதிராக அரசு நிகழ்த்தும் யுத்தம் இது. போதைப்பொருள்களின் நெட்வொர்க்கை முழுமையாக அழிக்கும் வரை ஓயமாட்டோம்’ என்றும் ரமேஷ் சென்னிதலா உறுதியாக பேசியிருந்தார்.

CM Vijay
CM Vijay

ஒரு மாநிலம் நினைத்தால் மட்டும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திவிட முடியாது. அண்டை மாநிலங்களும் கேரளத்துடன் இணைந்து பயணித்தால் மட்டுமே போதைப்பொருள் நெட்வொர்க்கை கட்டுப்படுத்த முடியுமென ரமேஷ் சென்னிதலா நினைக்கிறார். கடந்த வாரம் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்தும் இதுகுறித்து ஆலோசித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களின் உயரதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுடனும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்தே இன்று ரமேஷ் சென்னிதால் சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் முதல்வரிடம் ஆப்பரேஷன் Toofan குறித்து விளக்கி தமிழக அரசின் முழு ஆதரவையும் கோரவிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தவெக புதிய தொழிற்சங்கம்; நீண்ட கால ரசிகரை தலைவராக்கும் முதல்வர் விஜய்?' – திட்டத்தின் பின்னணி!

திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகளை போல தவெகவுக்கும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார்...

கட்சி தாவ தயாராகும் தேனிக்காரர் டு `அய்யாவை சந்திக்க முடியவில்லை' பா.ம.க சர்ச்சை! | கழுகார்

பா.ம.க-வில் வெடிக்கும் சர்ச்சை!"அய்யாவை சந்திக்க முடியவில்லை..."பா.ம.க-வில் தந்தையும் மகனும் இணைந்துவிட்ட நிலையில்,...

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா...

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" – முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக...