சாத்தூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ விலகல்!
சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
“கட்சியில் உழைப்பவர்களுக்கு இடமில்லை, நடிப்பவர்களுக்கே இடமிருக்கிறது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை இபிஎஸ் சீரழித்துக்கொண்டிருக்கிறார். பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அ.தி.மு.க-வில் இடமுண்டு” எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக ‘இணைப்பு விழா’வில் காலை மெனு, மதிய மெனு
காலை மெனு :
ஹார்ட்டின் இட்லி
பீட்ரூட் அல்வா
பொங்கல்
மெதுவடை
சட்னி, சாம்பார்.
மதியம் மெனு :
மட்டன் பிரியாணி
சிக்கன் மஞ்சுரியன்
தால்சா
ஸ்வீட்





தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தவெகவில் இணையும் இணைப்பு விழா நடக்க உள்ளது.
இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடக்க உள்ளது.
இந்த விழாவில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்…
சி.விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்
எஸ்.வளர்மதி
எம்.எஸ்.எம்.அனந்தன்

ஸ்டாலின் ஆலோசனை
தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவை மறுசீரமைப்பு செய்வதிலும்… மறுகட்டமைப்பு செய்வதிலும் மிக தீவிரமாக இருக்கிறார். இதற்காக குழு ஒன்றையும் அமைத்திருந்தார்.
அந்தக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!




