14
June, 2026

A News 365Times Venture

14
Sunday
June, 2026

A News 365Times Venture

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' – நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

Date:

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில்.

“இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.

இதை நான் செய்யவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

தர்மஸ்தலா கோயில்

பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்” என்று, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் சின்னையா புகார் ஒன்றை அளித்தார்.

இது 2025-ம் ஆண்டு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு.

இதே சின்னையா நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் தர்மஸ்தலா கோயிலின் பெயரைக் கெடுக்க தன்னைப் பயன்படுத்தி கொண்டனர் என்று தெரிவித்துள்ளார் சின்னையா.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது…

“அனைவருக்கும் வணக்கம். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக என்னைப்பற்றிய சில செய்திகள் விவாதிக்கப்பட்டு வருவது என் கவனத்திற்கு வந்துள்ளது.

இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்பதாலும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடும் ஒரு விஷயம் என்பதாலும், எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க வேண்டியது என் கடமையாகும்.

பிரகாஷ் ராஜ் பதிவு
பிரகாஷ் ராஜ் பதிவு

நான் தற்போது சற்று தூரத்தில் இருக்கிறேன். இன்னும் இரண்டு நாள்களில் நானே நேரில் வந்து, ஊடக நண்பர்கள் வாயிலாக இதற்குப் பதிலளிக்கிறேன்.

அதுவரை காற்றில் பரவும் வெற்று வதந்திகளையும், சில சமூக விரோதிகள் இந்தச் செய்திக்கு இறக்கை முளைக்க வைக்கப் பார்ப்பதையும் தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு...

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை… 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம...

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" – சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து...

“பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" – பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து...