செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம்…— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 9, 2026
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும்,…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 9, 2026
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச்…— Udhay (@Udhaystalin) June 9, 2026
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும்…— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 9, 2026
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.@CMOTamilnadu@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின்… pic.twitter.com/IZ9eLITunM— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 9, 2026
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது… pic.twitter.com/RbEZYLrvGO— TN Fact Check (@tn_factcheck) June 9, 2026




