9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

தவெக ஆட்சியில் பங்கு? – "பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைக்கிற மாதிரி…" – மாணிக்கம் தாகூர் பதில்

Date:

பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை த.வெ.க பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “த.வெ.க தலைவர் விஜய் பாஜக-விற்கு எதிராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். மதவாதத்தை ஆதரிப்போம் என்று சொன்னவர்களை த.வெ.க தோற்கடித்து இருக்கிறது.

விஜய், ராகுல் காந்தி

இதெல்லாம் தேர்தல் முடிவில் வெளிவந்த உண்மை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிலை என்ன என்பதை அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்து இருக்கிறது.

அந்த முடிவை அகில இந்திய தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். எங்களைப் பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வரக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது. அதற்காகச் சண்டை போடுகிறோம்.

இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது. 2026 தேர்தல் முடிவுற்றது. த.வெ.க-விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள்.. இதெல்லாம் பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைப்பது மாதிரி.. அதனால் நடக்கட்டும்.

மாணிக்கம் தாகூர்

தமிழக வாக்காளர்கள் தெளிவாக முடிவு எடுத்து வருகிறார்கள். சிலர் சொல்லிவிட்டு இருந்தார்கள் தமிழக மண்ணுக்கு ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று… மக்கள் அதற்குப் பதில் சொல்லிவிட்டார்கள். தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”எஸ்.காமராஜ் மீது சந்தேகம் இருந்தது”- தவெக ஆதரவு விவகாரம் கொதிக்கும் மன்னார்குடி அமமுகவினர்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்....

புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் – யார் இந்த ராஜா சுப்ரமணி?

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை...

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் – திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும்...

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய...