9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" – மாணிக்கம் தாகூர்

Date:

தவெக ஆட்சியமைக்க திமுக – அதிமுக இணைகிறது… தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்… விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தனது எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

“தேர்தல் முடிவு வந்த அன்றே ராகுல் காந்தி ஸ்டாலினுக்கும் மம்தா பானர்ஜிக்கும் போன் செய்தார். அடுத்த நாள் காலையிலேயே மம்தாவுக்குப் பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்தார். வங்காளத்தில் பாஜக 100 இடங்களைத் திருடிவிட்டது என்றும் சொன்னார்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

தமிழகத்தில் மக்களின் தீர்ப்பை மதிக்கவும், ஒரு நிலையான ஆட்சி அமையவும், முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியை வெளியே வைக்கவுமே காங்கிரஸ் கட்சி தவெக-வை ஆதரித்தது.

ஆனால் இப்போது ‘கோடி’ மீடியாக்களும் (Godi media), திமுக ஆதரவு ஊடகங்களும் காங்கிரஸைக் குற்றம் சொல்கின்றன. நிஜத்தில், பாஜகவின் ஆசியோடு திமுக இப்போது அதிமுக-விடம் பேசிக் கொண்டிருக்கிறது. இது நடைமுறையில் வேறு பெயரில் இருக்கும் என்.டி.ஏ கூட்டணிதான்.

இப்போது சொல்லுங்கள், காங்கிரஸ் கட்சி என்.டி.ஏ ஆட்சிக்கு வர உதவி செய்திருக்க வேண்டுமா?

தவெக ஆரம்பத்திலிருந்தே பாஜக-வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் அந்த நிலைப்பாட்டுடன் உறுதியாக நின்றது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை”.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' – எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report

தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப்...

திமுக – அதிமுக: 'ஜானகி அம்மையாருக்கு கலைஞர் அளித்த பதில்'- விளக்கும் மூத்த பத்திரிகையாளர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில்...

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" – சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக...

'ஜோசப் விஜய் எனும் நான்…' – ட்விஸ்ட் வைக்கும் விசிக, ஐ.யூ.எம்.எல்; முதல்வராவாரா விஜய்?

(இந்தச் செய்தி, சில மணி நேரத்துக்கு முன்பு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்...