30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

Assam: சிக்கலில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா; முன் ஜாமீன் மறுக்கும் நீதிமன்றம்; என்ன பிரச்னை?

Date:

இந்த மாதத் தொடக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதும், அவரின் மனைவி ரினிகி புயன் சர்மா மீதும் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, “இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் ரிகினி புயன் சர்மா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். அவருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதா? இந்தியச் சட்டப்படி ஒருவர் இரண்டு நாடுகளின் குடியுரிமை அல்லது பாஸ்போர்ட்டை வைத்திருக்க முடியாது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்.” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கான ஆதரங்களையும் வழங்கியிருந்தார்.

அதேநேரம் ஹிமந்த பிஸ்வா ஷர்மா தரப்பில், `இந்த ஆதாரங்கள் அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியானவை’ எனக் குறிப்பிட்டு கவுகாத்தி காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பவன் கெரா முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் `வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகவும், அவர் காட்டிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை அறிய போலீஸ் விசாரணை தேவை’ எனக் கூறி முன்ஜாமீன் வழங்க மறுத்தது.

அதைத் தொடர்ந்து பவன்கேரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பவன் கேரா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “பவன் கெரா ஒன்றும் கொடூரமான குற்றவாளி அல்ல. அவதூறு வழக்குகளில் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “பவன் கெரா காட்டிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் பின்னணி குறித்து விசாரிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்.” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் முடிவு, பவன் கெரா கைது செய்யப்படுவாரா அல்லது அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளம்: "தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை"- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

கேரள மாநில ராணுவ நலன் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் முதன்மைச்...

`ஆளுக்கொரு திசையை காட்டும் கணிப்புகள்' – தமிழக Exit Poll முடிவுகளை எப்படி புரிந்து கொள்வது?

5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கின்றன....

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...