7
July, 2026

A News 365Times Venture

7
Tuesday
July, 2026

A News 365Times Venture

"9.1 கோடி ஈரான் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால், போருக்குக் காரணம்…" – ட்ரம்ப்

Date:

ஈரானில் வருகிற ஜூலை 9-ம் தேதி வரை உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசும் போது, “கச்சா எண்ணெய் விலையானது நாம் இந்தப் போரைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரலுக்கு என்ன விலை இருந்ததோ, அதைவிடக் குறைவான நிலைக்கு இப்போது வந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரானில் அணு ஆயுதத்திற்கு இடமில்லை. ‘அணு உறைதுகள்’ (Nuclear dust) என்று அழைக்கும் அந்தச் செறிவூட்டப்பட்டப் பொருட்களை நாம் கைப்பற்றப் போகிறோம்.

நான் இதில் இவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு ஒரே ஒரு வலுவான காரணம்தான் இருக்கிறது. அது, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான்.

நான் அங்கு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் உண்மையில் அங்கு ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. முதல் ஆட்சி போய்விட்டது, இரண்டாவது ஆட்சியும் போய்விட்டது.

இப்போது இருக்கும் மூன்றாவது ஆட்சி கொஞ்சம் பகுத்தறிவுடன் நடக்கும் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் எப்படியும் ஒரு வழியில் வெற்றி பெறத்தான் போகிறோம். ஒன்று, நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம் அல்லது இந்தப் போரை முழுமையாக முடிப்போம், அவ்வளவுதான்.

இந்தப் போரை முடிப்பது ஒன்றும் நமக்குக் கடினமான காரியம் அல்ல. ஆனால், அங்கிருக்கும் 91 மில்லியன் (9.1 கோடி) மக்களைப் பாதிக்க நான் விரும்பவில்லை என்பதால், ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளவே நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக MLAக்கள் ‘குதிரைப் பேரம்’ சர்ச்சை: அரசிடம் விளக்கம் கேட்க தயாராகும் ஆளுநர்? | Exclusive

தமிழக அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் மற்றும்...

Vijay: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகள் விசாரணை – என்னென்ன? | Live updates

ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து 'சமூகநீதித்துறை'தமிழ்நாடு அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை 'சமூகநீதித்துறை' என்று அதிகாரப்பூர்வமாக...

மதுரை: ரூ. 13,132 கோடி மதிப்புள்ள கிரானைட் வழக்கு; 13 ஆண்டுகளாக இழுபறி; குவிந்துள்ள கற்கள் | Photos

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில்...