19
July, 2026

A News 365Times Venture

19
Sunday
July, 2026

A News 365Times Venture

`6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழுமா?'- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு அமைச்சர் மரியவில்சனின் பதில் என்ன?

Date:

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீ வைகுண்டத்தில் நடந்த பொதுகூட்டத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என உரையாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான கேள்வி தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், “கடந்த 15 முதல் 16 நாள்களாக முதலமைச்சர் அனைத்துத் துறை ரீதியிலான அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை நேரில் சந்தித்துத் தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தினந்தோறும் சராசரியாக 6 முதல் 7 மணி நேரம் வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு, பல முக்கிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அமைச்சரவை கூட்டமும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. வரப்போகும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தவெக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி ஆறு மாத காலத்தில் கவிழ்ந்துவிடும், அமைச்சர்கள் எல்லாம் எங்களிடம் வந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசிவருவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் இன்னும் ரியாலிட்டிக்கு வரவேயில்ல்லை, அவருக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. பாவம், அதனால்தான் அவர் இன்னும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் இப்படிப் பேசி வருகிறார். இந்த உண்மை அவருக்கும் புரியவில்லை, அவர் தலைமைக்கும் புரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அவர்கள் தலைவணங்க பழக வேண்டும்.

கடந்த 50 முதல் 55 நாள்களில் அரசு எடுத்து வரும் அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் 100% வரவேற்கிறார்கள். மக்கள் அனைவரும் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை துறை ரீதியாக நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் போது, எதிர்க்கட்சியினரும் இதனைச் சந்தோஷமாக வரவேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தாய் மாமன் சீர்; கொத்து புரோட்டா; அதிமுக, திமுக கூட்டணி; மிதுன் வருகை' – காயத்ரி ரகுராம் நேர்காணல்

அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலம். அக்கட்சியின் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி...

`இந்த ஆட்சியில் பணியிட மாறுதல் டெண்டருக்கு லஞ்சம் தேவையில்லை என என்னிடம் கூறுகிறார்கள்'- பெ.சண்முகம்

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கும்...

அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மௌனம்.!' – மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு...

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? – என்ன சொல்லப்படுகிறது?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று...