15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

"6 மாதங்கள் விஜய்க்காக வேலை பார்த்திருக்கிறேன்; ஆனால்…" – குதிரை பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசு

Date:

தவெக கட்சியின் எம்எல்ஏ என்.இளையராஜாவிடம், ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து எம்எல்ஏ இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தவெக எம்எல்ஏ என்.இளையராஜா

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, திருநாவுக்கரசு தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

அந்த வகையில் கையெழுத்திட்ட பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசு, “மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஜான் ஆரோக்கியசாமியிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன், விஜய்யிடம் எவ்வளவு முறை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறேன், ஆதவ் ஆர்ஜுனாவிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வதற்கான காலம் இருக்கிறது.

கட்டாயம் பேசுவேன். ஆறு மாதங்கள் விஜய்க்காக நான் வேலை பார்த்திருக்கிறேன். விஜய்யை முதலமைச்சர் என்று சொன்னதே நான்தான். நிறைய உண்மைகள் இருக்கின்றன. அதற்கு முன் யாரும் கற்பனைக் கதைகளை எழுத வேண்டாம்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

இந்த வழக்கு தள்ளுபடி ஆகும்போது நிச்சயம் பேசுவேன். எனக்கு ஏற்பட்ட அநீதிகளை மக்களிடம் கொண்டு செல்வேன். மன வலி இருக்கிறது. இரண்டு மாதம் காத்திருங்கள் பல உண்மைகளைச் சொல்கிறேன்” என்று ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ – ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' – ஈரான் பதிலடி

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப்...

எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; “சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா?" – எடப்பாடி கமென்ட்!

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய...

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்...

'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' – பின்னணி என்ன?

தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசற் கதவின்...