15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ – ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' – ஈரான் பதிலடி

Date:

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப் போரின் மையமாக மாறிவிட்டது.

அணு ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த இந்தப் போர் என்று கூறிய அமெரிக்கா, இப்போது ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறக்கவும், அங்கே ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதை முனைப்புடனும் எதிர்த்து வருகிறது அமெரிக்கா.

விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவிற்கு!

இந்த நேரத்தில் நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “ஈரானை நாம் முற்றிலும் வீழ்த்திய பிறகு, அவர்கள் இப்போது மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வெகு விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக நான் அறிவிக்கப்போகிறேன். அதனால் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி

உங்கள் பெட்ரோலுக்கு நீங்கள் மிகக் குறைந்த அளவில் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருந்தால், உலகிலேயே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் முதன்மை நாடான ஒரு மிக மோசமான நாட்டின் கையில் அணு ஆயுதம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

எனவே, பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு $4 ஆக உயர்ந்து, நீங்கள் கொஞ்சம் கூடுதல் பணம் கொடுக்க நேரிடும் போது இதைக் நினைத்துப் பாருங்கள்.

இந்தப் போருக்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நான் சரியான காரியத்தைத்தான் செய்திருக்கிறேன்.” என்றார்.

‘அது முடியாது’ – ஈரான் பதிலடி

ட்ரம்பின் இந்தப் பேச்சிற்குப் பதிலடியாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாடி, “ஈரானை வீழ்த்திய பிறகு, ஹார்முஸ் நீர்ச்சந்தியை வெகு விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்!

ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒரு ட்வீட் மூலமாகவோ, போர்க்கப்பலை அனுப்பியோ, ஒரு உத்தரவைப் பிறப்பித்தோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சின் மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது.

ஈரான் மிரட்டல்களுக்குப் பயப்படுவதும் இல்லை. அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதும் இல்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நிர்வாக ரீதியாக மட்டுமே மத்திய அரசோடு ஒத்துழைக்கிறோம்; ஆனால்.!" – விஜய்| 80வது சுதந்திர தினம் | Live Updates

விஜய் உரை"மக்களே... ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள்....

எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; “சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா?" – எடப்பாடி கமென்ட்!

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய...

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்...

'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' – பின்னணி என்ன?

தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசற் கதவின்...