6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு… யாருடையது தெரியுமா? – கெஜ்ரிவால்

Date:

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆம் ஆத்மி கட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று மதியம் மிக மிக மி முக்கிய விஷயம் குறித்து செய்தியாளர் சந்திப்பு’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “டெல்லி மக்கள் முன்பு இரண்டு மாடல்கள் தற்போது உள்ளன. ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல். இன்னொன்று, மக்கள் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் மாடலா; பாஜக மாடலா?!

ஆம் ஆத்மி அரசால் ஒவ்வொரு மாதமும் டெல்லி மக்கள் 25,000 ரூபாய் வரையில் பலனடைகிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும். காரணம், அந்தத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது மாடலுக்கு எதிரானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியை ஆளும் பாஜக அரசு 400-500 பேருடைய ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அந்த 400 – 500 பேரும் ஒருவகையில் பாஜக அரசின் பணக்கார நண்பர்கள் ஆவார்கள்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ – பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட...

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் – அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு...

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை...

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது....